Author : விகடன் பிரசுரம்
Print book
₹125
Out of Stock
You can get this ebook instantly on our apps once you have made a payment.
இது தகவல்களின் உலகம். எங்கெங்கோ கொட்டிக் கிடக்கும் தகவல்களை தேடித் திரட்டி, அவரவர் தேவைக்கும் நோக்கத்துக்கும் ஏற்ப தொகுத்துப் பார்த்து, அதிலிருந்து கிடைக்கும் அரிய உண்மைகளைப் பயன்படுத்தி, தொலைநோக்கான முடிவை எடுப்பவர்களே போட்டியில் முந்தும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இலக்கு எது என்று நிர்ணயிப்பதற்கும், அதை நோக்கிக் குறி பார்த்து எய்வதற்குமான திறமை எவ்வளவுதான் இருந்தாலும்... தகவல் என்ற வலிமையான அஸ்திரம் இல்லாமல் எவரும் இங்கே நினைத்ததைச் சாதித்துவிட முடியாது. அந்த வகையில், 85 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து, சுவையோடு அளித்து வரும் விகடன் குழுமத்திலிருந்து முதன்முறையாக வெளியாகும் இந்த 'விகடன் இயர் புக்' எத்தகைய துல்லியத்தோடும், சுவாரஸ்யத்தோடும் தொகுக்கப்பட்டிருக்கும் என்பது தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை! கல்வி, வேலைவாய்ப்பு, சுயமுன்னேற்றம் என்று பலவகையிலும் தாகம் கொண்ட இளைய தலைமுறையினருக்கு மட்டுமின்றி... அனுபவத்தில் மூத்தவர்களாக, வெவ்வேறு துறைகளில் இயங்கி வரும் பெரியவர்களையும் மனதில் கொண்டே இந்த 'விகடன் இயர் புக் - 2013' உருவாகி இருக்கிறது. ஆழ்ந்த அனுபவம் பெற்ற செய்தியாளர்கள் தொடங்கி... அரசியல், சமுதாயம், வரலாறு, இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், தொழில்துறை, பொருளாதாரம் என்று பல்வேறு துறைகளில் தனித்தன்மையோடு தேர்ந்த நிபுணர்களும் இந்த தகவல் களஞ்சியத்துக்காக தங்களின் தேர்ந்த உழைப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில், உங்கள் அனைவரையும் அறிவுச் செல்வந்தர்களாகப் பெருமைகொள்ள வைக்கும் ஒரு பத்தாயமாக விகடன் இயர் புக் விளங்குகிறது. மிக முக்கிய நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள், அதிரடித் திருப்பங்கள், ஆச்சர்யப்பட வைத்த சுவாரஸ்யங்கள், நடுங்க வைத்த அதிர்வுகள் என 2012-ம் ஆண்டின் காலக் கண்ணாடியாக அத்தனைவிதமான முக்கிய நிகழ்வுகளையும் கண் முன்னே இது நிறுத்துகிறது. உலக நாடுகள், இந்திய மாநிலங்கள், தமிழக மாவட்டங்கள் குறித்த தகவல்கள் மிகத் துல்லியமாகச் சேகரிக்கப்பட்டு, நீங்களெல்லாம் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம் அழகிய வடிவமைப்பில் தொகுக்கப்பட்டு உள்ளன. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முக்கியக் கேள்வியாகக் கேட்கப்படும் செம்மொழித் தமிழ் (இருமொழிக் கொள்கை என்றும் கேட்கிறார்கள்) குறித்த மிக விளக்கமான கட்டுரை முத்தாய்ப்பு முன்னுதாரணமாகச் சொல்லப்படும் அளவுக்கு நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை குறித்த ஆக்கபூர்வத் தகவல்கள், உலக நிறுவனங்கள் குறித்த விளக்கங்கள், தமிழகத்தின் அடையாளங்களாக விளங்கும் முக்கிய இடங்கள் குறித்த தெளிவுகள், தமிழகச் சுற்றுச் சூழல் குறித்த ஆய்வுகள், தமிழக அரசின் சமூல நலத் திட்டங்கள் குறித்த விரிவான பார்வை, தமிழகத்தின் பால் வளம் என்று சாலச்சிறந்த ஆசிரிய பெருமக்களால் மிகுந்த கவனத்தோடு உருவாக்கப்பட்டு இருக்கிறது விகடன் இயர் புக் - 2013. தகவல் அஸ்திரத்தை அளிப்பதோடு, அதை செவ்வனே எய்யக்கூடிய வழிமுறைகளையும் சேர்த்தே தருகின்றன பல கட்டுரைகள். லட்சியப் பதவிகளை அடைவதற்கான தேர்வுகளுக்கு இளைய சமுதாயம் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் பக்குவத்தை, விரல் பிடித்து வழி நடத்தும் கட்டுரைகள் அவை. பொதுத் தமிழ்ப் பாடத்தின் முக்கியக் கேள்விகள், ஆன்மிக விளக்கங்கள், டி.என்.பி.எஸ்.சி குறித்த விரிவான பார்வை, குவிஸ் பக்கங்கள், புதிய நாடுகளைப் பற்றிய ஆச்சர்யங்கள், பூமியின் தோற்றம் மற்றும் கண்டங்கள் குறித்த தகவல் திரட்டுகள், அளவுகளும் அலகுகளும் குறித்த விவரங்கள், தங்கம் குறித்த அண்மைத் தகவல்கள் என எவரும் தவறவிட முடியாதபடி அமைத்திருக்கிறோம் இந்த பொது அறிவுப் பொக்கிஷத்தை. இளைய தலைமுறையின் நெஞ்சுரத்துக்கு ஊக்கமூட்டும் விதமாக குன்றக்குடி அடிகள், தமிழருவி மணியன், இறையன்பு ஐ.ஏ.எஸ்., நெல்லை ஜெயந்தா ஆகியோரின் தன்னம்பிக்கைக் கட்டுரைகளும் இதன் தனி அடையாளம். இதற்கெனவே தங்கள் படைப்புகளை அளித்திருக்கும் பிரபலங்களின் பட்டியல் அத்தனை நேர்த்தியானது... பொருத்தமானது. ‘அனைவருக்கும் வேலை... அசத்தப்போகிறது தமிழகம்’ எனும் அட்டைப்படக் கட்டுரையும், இன்றைய இளைய தலைமுறையினரிடம் நடத்தப்பட்ட, ‘100 வருடங்கள்... 100 தமிழர்கள்’ கருத்தாய்வு முடிவும் சிறப்பான நம்பிக்கையை எவருக்குள்ளும் விதைக்கும். விகடன் பாசறையிலிருந்து காலத்தின் தேவையாக வெளிப்பட்டிருக்கும் இந்த முதல் 'இயர் புக்' பற்றிய உங்கள் அனைவரின் கருத்துகளையும் அறிந்துகொள்ள ஆர்வமாகக் காத்திருக்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மலரப் போகும் இந்த 'இயர் புக்' வரிசையை மேலும் மேலும் செம்மையாக்கிக் கொடுப்பதற்கு... எங்கள் அனுபவம் மட்டுமின்றி, உங்கள் ஆலோசனையும் உறுதுணையாக இருக்கும். உங்களின் வெற்றியே எங்களின் வரலாறு..! உங்களின் மேலான கருத்துகளுடன் எங்களைத் தொடர்புகொள்ள: தபால் முகவரி: விகடன் இயர் புக், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் : yearbook@vikatan.com தொலைபேசி வாயிலாக உங்கள் கருத்தைப் பதிவு செய்ய: 044-66802990
Read More
Generic Name : Book
Book code : 700
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-466-6
Country of Origin : India
Contact us : books@vikatan.com
Out of Stock
₹
M.R.P: ₹.00
You can get this ebook instantly on our apps once you have made a payment.