Author : விகடன் பிரசுரம்
Print book
₹140
Out of Stock
You can get this ebook instantly on our apps once you have made a payment.
‘விகடன் இயர் புக்’ என்பது குறிப்பிட்ட ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டுமல்ல. குறிப்பிடத்தக்க அறிவுக் கருவூலமாக ஒவ்வோர் ஆண்டும், பாதுகாக்க வேண்டிய பெட்டகமாகவே வெளியிடப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டு முதன்முதலாக ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டது. தொடர்ச்சியாக தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அறிவுக் கருவூலமாக பரிணாமம் பெற்று வருகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலகம், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மாவட்டங்கள், 16-வது நாடாளுமன்றத் தேர்தல், இந்திய அரசமைப்பு, இந்திய வேளாண்மை, தமிழக அரசின் திட்டங்கள்... எனப் பல்வேறு தகவல்கள் மலையளவு இதில் குவிந்துள்ளன. இலங்கை 13-வது சட்டத்திருத்தம், நீர் மேலாண்மை, நோபல் பரிசு பெற்ற இலக்கியவாதிகள், பேரண்டத்தின் ஆச்சர்யங்கள், பெண்ணுரிமை சட்டங்கள், கிராம நிர்வாகம் உள்ளிட்ட சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. போட்டித் தேர்வுகளில் பங்கெடுக்கக் காத்திருப்பவர்களுக்காகவே 2015-ன் நாட்குறிப்புகள், எபோலா A-Z, GATE தேர்வுக்கு ஒரு கேட் பாஸ், கண்டுபிடிப்புகள், இதிகாசக் குறிப்புகள், தனிம வரிசை அட்டவணை, கண்டங்களின் விவரங்கள் இதில் மொத்தமாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இயர் புக்கின் சிறப்புப் பகுதி அறிவியல் தொழில் நுட்பம் பற்றியது. வேளாண், அணுசக்தி, விண்வெளி, பாதுகாப்பு, எரிசக்தி, தகவல், உயிரி, மருத்துவம் என அனைத்துத் தொழில்நுட்பங்கள் பற்றியும் 64 பக்கங்களுக்குத் தகவல்கள் தரப்பட்டுள்ளன. வாருங்கள் அறிவுலகத்தின் வாசல் திறப்போம். வெற்றி வாகை சூடுவோம்!
Read More
Generic Name : Book
Book code : 861
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-627-1
Country of Origin : India
Contact us : books@vikatan.com
Out of Stock
₹
M.R.P: ₹.00
You can get this ebook instantly on our apps once you have made a payment.