Author : விகடன் பிரசுரம்
Print book
₹170
Out of Stock
‘விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாவித்து பாதுகாக்கவேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான ஒரு புத்தகமாகத் திகழும் விகடன் இயர் புக், ஆண்டுதோறும் மேன்மேலும் பரிணாமம் பெற்று வருகிறது. தொடர்ச்சியாக இந்த ஆண்டும் அறிவுலகத்தின் திறவுகோளாக வெளியிடப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நூற்றாண்டு விழா), இந்தியாவில் மொழி அரசியல் (50-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம்), கலாம் களஞ்சியம் (கலாம் எழுதிய புத்தகங்கள், அவரின் பணிகளை அடிப்படையாகக்கொண்டு A - Z க்விஸ்), 2016-ம் ஆண்டு ஒட்டகம், பருப்பு ஆண்டுக்கான சிறப்புக் கட்டுரைகள், பொது அறிவு காலண்டர், அமெரிக்க அதிபர் தேர்தல் என, உள்ளூர் தகவல் முதல் உலகளாவியத் தகவல்கள் வரை திரட்டித் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், டி.என்.பி.எஸ்.சி கம்ப்யூட்டர் வினாக்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கான ‘யார் பெரிய ஆராய்ச்சியாளர்’ என்ற வழிகாட்டி கட்டுரை, அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள், மொபைல் சாஃப்ட்வேர், விவசாயம் மற்றும் வானியல் தொழில்நுட்பம், உலக நாடுகள் பற்றிய விவரங்கள், இந்திய மாநிலங்கள், தமிழ்நாட்டின் மாவட்டங்கள், 90-க்கு மேற்பட்ட முத்திரை முகங்கள்... என அரிய பெரிய தகவல்களைத் தன்னகத்தே தாங்கி வெளிவந்திருக்கிறது. அறிவுலகில் பயணிக்க ஆவலுடன் பக்கங்களைப் புரட்டுங்கள்... எதிலும் உங்களுக்கு வெற்றி உறுதி!
Read More
Generic Name : Book
Book code : 925
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-693-6
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00