Author : விகடன் பிரசுரம்
Print book
₹160
Ebook
₹50₹6017% off
Out of Stock
வியாபார உலகத்தில் முன்னேறுவதற்கு பணத்தையும் படிப்பையும்விட ஜெயிக்க வேண்டும் என்கிற மன உறுதிதான் முக்கிய தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் ஹீரோக்களின் கதைதான் ‘ஜீரோ to ஹீரோ!’ இந்த நூலில் இடம்பெறும் தொழில் முனைவர்கள் பதினைந்து பேரும் சாதாரண குடும்பச் சூழ்நிலையிலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்தான். இன்று பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே இரவில் இவர்கள் இந்த மாபெரும் வளர்ச்சியைக் கண்டுவிடவில்லை. ஓயாமல் உழைத்திருக்கிறார்கள்; தீவிரமாக யோசித்திருக்கிறார்கள். தங்களுக்குக் கிடத்த ஒவ்வொரு நிமிடத்தையும் சாதகமாக மாற்றித்தான் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். திடீர் திடீரென எழுந்த சிக்கல்கள், சறுக்கல்கள், தோல்விகள் என எல்லாவற்றையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். பொருளாதார நெருக்கடி என்கிற பின்னடைவினால் சோர்வடையாமல், பிஸினஸ் உலகத்தை எதிர்கொண்டு, கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சறுக்கல்கள் இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை என்பதற்கு இவர்களின் வாழ்க்கை மிகச் சிறந்த உதாரணம். ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வெளிவந்த இந்தக் கட்டுரைகள், இன்றைய இளைஞர்களின் மனோபாவத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கி, தொழில்முனைதல் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி இன்று வியாபார சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய இந்த ஹீரோக்களின் வாழ்க்கை, புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும்!
Read More
Generic Name : Book
Book code : 468
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-231-0
Country of Origin : India
Contact us : books@vikatan.com
Out of Stock
₹
M.R.P: ₹.00