Author : மதன்
Print book
₹260
Ebook
₹70₹10030% off
Out of Stock
ஆனந்த விகடனில் 1995'ல் ஹாய் மதன் என்ற தலைப்பில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தார் மதன். ஒவ்வொரு வாரமும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பகுதியாக இது ‘ஹிட்’ ஆனது! இதுவரை 7000 கேள்விகளுக்கு மேல் இந்தப் பகுதியில் பதிலளித்திருக்கிறார் மதன். இது ஒரு சாதனையே! ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மலை போல் குவிய, அதிலிருந்து பொறுமையாகக் கேள்விகளை தேர்வு செய்து ஆதாரபூர்வமாக அவற்றுக்குப் பதில் எழுதி வருகிறார். புராணம், வரலாறு, விஞ்ஞானம்... என்று எது குறித்துக் கேள்விகள் கேட்டாலும் பதில் கிடைக்கும் மதனிடம். அதேபோல், விலங்குகள், பறவைகள், புதிய கண்டுபிடிப்புகள்... என்று வாசகர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் இவரிடம் விடை கிடைக்கும். காதல் பற்றி, மனித உறவுகள் பற்றி, மனோதத்துவம் பற்றி... என்று வித்தியாசமான சப்ஜெக்ட்களையும் இந்தப் பகுதியில் லாவகமாகக் கையாண்டிருக்கிறார். அவ்வளவு ஏன்? மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கும் அந்தத் துறை சார்ந்த நூல்களைப் படித்து, அலசி ஆராய்ந்து, ஆதாரங்களுடன் பதிலளித்திருக்கிறார். இந்தப் பதில்கள் எல்லாமே ஒரு முறை படித்துவிட்டு மறந்து விடக் கூடியதில்லை. கைவசம் அவை இருந்தால் எந்தச் சமயத்திலும் யாருக்கும் பயன்படக் கூடும். 2006 நவம்பரிலிருந்து 2007 நவம்பர் வரையில் விகடனில் வெளியான கேள்வி பதில்களின் தொகுப்பே இந்த லேட்டஸ்ட் ஹாய் மதன். ஒவ்வொருவரின் வீட்டுப் புத்தக அலமாரியிலும் இந்த நூல் இருந்தால், பொது அறிவு விஷயங்களில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், ஒரு டிக்ஷனரி மாதிரி இதைப் புரட்டிப் பார்த்து விடை தெரிந்துகொள்ள முடியும்.
Read More
Generic Name : Book
Book code : 265
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-020-0
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00