Author : கவிஞர் வாலி
Print book
₹95
Out of Stock
முருகனின் புகழ் பாடவும், அவனைத் துதி பாடவும் எத்தனையோ வழிமுறைகள் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகின்றன. அருணகிரிநாதர் உள்ளிட்ட அநேகம்பேர் ஆறுமுகத்தானுக்கு பாமாலைகள் பல சூட்டி ஆனந்தப்பட்டிருக்கிறார்கள். கவிஞர் வாலி தமக்கென்று வகுத்துக் கொண்டிருக்கும் தனி பாணியில், கட்டளை கலித்துறை வழியே கந்தனைப் பாடி களிப்புற்றிருக்கிறார். நூறு பாக்கள் அடங்கிய இந்த அந்தாதி நூலில் முருகனின் அருமை பெருமைகளை அழகுபட எடுத்துரைக்கிறார் கவிஞர். கரடுமுரடான வார்த்தைப் பிரயோகங்கள் எதுவுமின்றி, எளிமையான வரிகளால் மாலன் மருமகனாம், மான்மகள் வள்ளி மணவாளனாம் வேலனின் வனப்பை ஒவ்வொரு பாடலிலும் கவிஞர் வாலி வர்ணிக்கும் பாங்கு, படிக்கும்போதே ஆறுமுகனை கண்முன் நிறுத்துகிறது. இங்கும் இருப்பான்; இதுபோல் இதேநேரம் இன்னோரிடம் அங்கும் இருப்பான்; அதுபோல் அதேநேரம் அம்புவிமேல் எங்கும் இருப்பான்; எதையும் இயக்கி எதனுள்ளிலும் தங்கும் உயிராவான் தேவானை கேள்வன் தணிகைவேந்தே! _ இது ஒரு துளி பதம். இப்படி ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு கருத்தைத் தாங்கி நிற்கும் கவிதைப் பெட்டகம் இந்நூல்! கவிஞரின் பாக்களுக்கு பெரும் புலவர் ம.வே.பசுபதி எழுதியிருக்கும்
Read More
Generic Name : Book
Book code : 390
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-149-8
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00