Author : இந்திரா சௌந்தர்ராஜன்
Print book
₹600
‘மண்ணுலகின் வைகுந்தம் என ஆன்மிக அன்பர்களால் போற்றிப் புகழப்படும் திருத்தலமாகவும், எண்ணியதும் புண்ணியம் தரும் அருட்தலமாகவும் திகழ்வது ரங்கம். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மைத் தலம் எனும் பெருமை பெற்ற அத்திருத்தலத்தில் சயனக் கோலம் கொண்டு சகல உயிர்களுக்கும் அருள்புரிந்துகொண்டிருக்கிறார் அரங்கநாதர். யுக யுகங்களுக்கு முன்னால் தன்னிலிருந்து பிரம்மனைப் படைத்த பரம்பொருளான திருமால், பிரம்மாவின் தவத்தால் பிரணவாகார விமானத்துடன் சத்ய லோகத்தில் தோன்றி பின்னர் பூவுலக ரங்கத்தில் நிலைகொண்டார். சத்யலோகத்தில் காட்சி தந்த எம்பெருமான் இப்பூவுலகுக்கு எப்படி, யாரால் வந்தார், ரங்கத்தில் நிலைகொள்ளும் முன்னர் வேறு எவ்விடத்தில் அருள்பாலித்துக்கொண்டிருந்தார், பிரணவாகாரப் பெருமாள் மண்ணுலகுக்கு வந்தது முதல் சில நூற்றாண்டுகள் வரையான சம்பவங்கள் வரை ‘ரங்க ராஜ்ஜியம்' முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில், அந்நியப் படையெடுப்புகளால் ரங்கம் கோயில் சந்தித்த இன்னல்கள், அதனால் அரங்கன் மூர்த்தம் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் எங்கெல்லாம் எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டது, 60 ஆண்டுகளுக்குப் பின் எப்படி மீண்டும் ரங்கம் கோயிலுக்கு யாரால், எப்படித் திரும்பியது என்பதைத் தன் வசீகர எழுத்து நடையால் இந்த இரண்டாம் பாகத்தில் சொல்லிச் சென்றிருக்கிறார் இந்திரா செளந்தர்ராஜன். இனி அரங்கனின் அற்புதங்களையும் அரங்கன் ஆலய சரித்திரத்தையும் அறிந்துகொள்ளச் செல்லுங்கள்
Read More
Generic Name : Book
Book code : 1133
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-951647-79-0
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00