Author : கட்டுரையாளர்கள்
Print book
₹210
Out of Stock
மருத்துவம் படித்தால்தான் வைத்திய ஆலோசனை சொல்ல முடியும். பொறியியல் படித்தால்தான் கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை சொல்ல முடியும். ஆனால் அனுபவப் படிப்பை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு இல்லத்தரசிகளாலும் ஆலோசனை சொல்ல முடியும். அதுதான் 'டிப்ஸ்'. காலையில் எழுந்தவுடன் டூத் பிரஷ்ஷை ஸ்டாண்டில் இருந்து எடுப்பது முதல் இரவு படுக்கையறை செல்வது வரை இல்லத் தரசிகள் சந்திக்கும் எத்தனையோ சின்னச் சின்னப் பிரச்னைகளை, அனுபவங்கள் காரணமாக எளிதில் சமாளிக்கக் கற்றுத் தேர்கிறார்கள். இந்த வகையில் தாங்கள் கண்டுப்பிடித்த (!) சமாளிப்பு முறைகளை 'அவள் விகடன்' இதழ் ஆரம்பித்த நாள் முதலே 'டிப்ஸ்'களாக வாசகிகள் பகிர்ந்துகொண்டு வந்தார்கள். அதைப் படித்த மற்ற வாசகியரும் 'அட.. சீயக்காய் அரைக்கும் போது வேப்பிலையையும் கடுக்காயையும் போட்டு அரைத்துத் தலைக்குத் தேய்த்தால் பேன் தொல்லை வரவே வராதாமே!' என்று வியந்து, அடுத்த முறை தங்கள் வீட்டில் அமல்படுத்தியும் விடுகிறார்கள். அவள் விகடனில் தொடர்ந்து வெளிவந்த டிப்ஸ்களை படித்த வாசகிகள் 'கணிசமான டிப்ஸ் துணுக்குகளைத் தொகுத்து ஒரு சூப்பர் புத்தகமாக வெளியிடுங்கள்... எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்று அவ்வப்போது தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள். இப்போதுதான் அதற்குச் சரியான வாய்ப்பு அமைந்திருக்கிறது. தெளிவான வடிவமைப்புடன், அழகான விளக்கப் படங் களுடன் கலர்ஃபுல்லாக உங்கள் கையில் 'டிப்ஸ்' புத்தகத்தைத் தவழவிட்டிருக்கிறோம். வரவேற்று வாழ்த்துங்கள்!
Read More
Generic Name : Book
Book code : 44
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 81-89780-66-2
Country of Origin : India
Contact us : books@vikatan.com
Out of Stock
₹
M.R.P: ₹.00