Deliver to Tamilnadu

வருச நாட்டு ஜமீன் கதை

Author : வடவீர பொன்னையா Book Code: 24
புத்தகத்தின் விலை
450

ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்கள் அதில் ஒலித்தன. அத்துடன் கிராமத்து கலாசாரமும் இழையோடும். அந்த மண்ணிலே தோன்றிப் பரவிய உண்மைச் சம்பவங்கள் கதைகளாகவும் வந்திருக்கின்றன. அந்த வரிசையில், இப்போது ‘வருச நாட்டு ஜமீன் கதை’. நூறு வருடங்களுக்கு முன்பு தேனி வட்டாரத்தில் சீரோடும் பேரோடும் வாழ்ந்த வருசநாட்டு ஜமீன் குடும்பம் ஒரு சித்தரின் சாபத்தால் சீரழிந்து போன கதை. சிறுவயது முதலே பெரியவர்கள் மூலமாக இந்தக் கதையை பாட்டாகவும் வசனமாகவும் சொல்லக் கேட்டவர் வடவீர பொன்னையா. இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் கதை சம்பந்தப்பட்ட ஜமீன் பரம்பரை மனிதர்களையும், வாரிசுகளையும், குடும்ப நண்பர்களையும் வடவீர பொன்னையா நேரில் சந்தித்து சம்பவங்களை உறுதி செய்துகொண்ட பிறகு... சுவாரசியமாக தொடரை எழுதி முடித்தார். வாசகர்களிடையே பலத்த கைதட்டல்களும் கிடைக்கின்றன. ‘வடவீர பொன்னையா’ என்ற பெயரில் ஒளிந்துகொண்டிருக்கும் பொன்.சந்திரமோகன் தேனி வட்டாரத்திலேயே பிறந்து வளர்ந்தவர். அதனால் தேனி மண்ணின் வாசனையையும், மக்களின் உணர்வுகளையும் அதே ஒய்யார நடையில் எழுதியதால் தொடருக்கு இன்னும் ‘கிக்’ அதிகமானது. கதைக்கேற்றபடி அழகான ஓவியங்கள் வரைந்து கொடுத்து தொடருக்கு மெருகூட்டியிருக்கிறார் ஓவியர் சசி. ‘பொன்ஸீ’ என்று அழைக்கப்படும் பொன்.சந்திரமோகன் விகடனில் மாணவராக எழுத ஆரம்பித்து... பின்பு புகைப்பட பத்திரிகையாளராக வளர்ந்து... தற்போது தேர்ந்த எழுத்தாளராக பெயர் எடுத்திருப்பது விகடனுக்குப் பெருமை!

New Releases

1