Deliver to Tamilnadu

நீங்களும் சமைக்கலாம் சிறுதானியம்

Author : ஜெயஸ்ரி சுரேஷ் Book Code: 897
புத்தகத்தின் விலை
150

உணவே மருந்து என்னும் தத்துவம் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இச்சூழலில் நமது பாரம்பரிய உணவு முறைகளுக்கு வரவேற்பு கூடிக்கொண்டே வருகிறது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இயற்கை வழியில் உடலை பேணிக்காக்க உயிர்ச்சத்துள்ள சிறுதானியங்கள் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள். நம் முன்னோர்கள் நோயற்ற வாழ்வு வாழ்ந்ததற்கு இந்த சிறுதானிய சமையலே காரணமென்றால் அது மிகையாகாது. உடலுக்குக் கேடு விளைவிக்காத, ஊட்டச்சத்து மிகுந்த குதிரைவாலி, சாமை அரிசி, கேழ்வரகு, கொள்ளு போன்ற சிறுதானியங்கள் மனிதனை நூறு ஆண்டு வாழ வைக்கும் அற்புத சக்தி மிகுந்தவை. இன்றுள்ள சூழலில் நமக்குத் தேவை சிறுதானிய சமையல் வகைகளே. பீட்சா, பர்கர் போன்ற துரித சமையல் வகைகளுக்கு அடிமைப்பட்ட நம் நாக்கு சிறுதானியங்களை ஏற்குமா? இந்த சிறுதானியங்களைச் சமைக்க வேண்டிய முறையில் சமைத்தால் நம் நாவிற்கு சுவை கூடும். தாது சத்துக்கள், புரதச் சத்துக்கள் நிறைந்த சிறுதானிய சமையல் வகைகள் நம் உள்ளத்தில் எழுச்சியையும், உடம்பிற்கு ஆரோக்கியத்தையும் தரும் வல்லமை வாய்ந்தவை. இந்த அற்புத சமையலை எப்படி செய்யலாம்? எவ்வாறு உண்ணலாம்? என்று வகை வகையாக இந்நூலில் அடுக்கியிருக்கிறார் ஜெய சுரேஷ். உடல்நலம் காக்க விருப்பப்படுபவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த அரிய புத்தகம்.

New Releases

1