Deliver to Tamilnadu

மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்! 5G

Author : சுவாமி சுகபோதானந்தா Book Code: 1087
புத்தகத்தின் விலை
260

அமைதியான மனதை நம்மைச் சுற்றி நிகழும், நிகழ்த்தப்படும் புறக்காரணங்கள் சலனப்படுத்தி விடுகின்றன. நடந்ததையே நினைத்து அல்லலுறுவது, ஆசை, கோபம், எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் இவைகளால் மனம் அமைதியாக ஓர் இடத்தில் நிற்காமல் அலைபாய்ந்துகொண்டே இருக்கிறது இன்றைய காலகட்டத்தினருக்கு! மனதை சரியான பக்குவத்தில் வைத்திருந்தால், நம்மால் எதையும் எதிர்கொள்ள முடியும், எதையும் சாதிக்க முடியும். மனதுக்கு அப்படியோர் ஆற்றல் உண்டு. பணம், பல வசதிகள் எல்லாம் இருந்தும் பலர் நிம்மதியில்லாமல் வாழ்வதற்குக் காரணம் மன அமைதியின்மையே. ஒன்று கிடைத்தால் அதை விட சிறந்த ஒன்று கிடைக்காதா என ஆசைப்படும் மனதால் எப்படி நிம்மதியாய் இருக்க முடியும்? அதனால் இன்றைய அவசர உலகில் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்தால் நிம்மதியை இழக்கின்றர் பலர். மனதைச் சரிப்படுத்தினால் எல்லாம் சரியாக நடக்கும் என்பதை சுவாமி சுகபோதானந்தா இந்த நூலில் பல உதாரணக் கதைகள் மூலம் விளக்குகிறார். மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்-1 மற்றும் 2-ம் பாகங்களை அடுத்து ஆனந்த விகடனில் வெளியான மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. விகடன் பிரசுரம் வெளியிட்ட சுவாமி சுகபோதானந்தாவின் நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் இந்த நூலும் இடம்பெறும் என்பதில் மறுப்பில்லை.

New Releases

1