Author : சுவாமி சுகபோதானந்தா
Print book
₹240
Ebook
₹102₹14530% off
Out of Stock
இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, ‘இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று கேட்காமல் 100 இளைஞர்களைத் தாருங்கள்’ என்றுதான் கேட்டார். தமிழின் முதல் தர வரிசையிலிருக்கும் ‘மனசே... ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ புத்தகத்தின் மூலம் தமிழ் வாசக உலகைப் புரட்டிப் போட்ட சுவாமி சுகபோதானந்தா அந்த உண்மையை நன்கு உணர்ந்தவர். ஆனால், அந்த இளைஞர்களைச் செதுக்குவது என்பது எளிய காரியமா என்ன..? நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி, தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து, திக்கு திசை தெரியாமல் பாயும் காட்டற்று வெள்ளமல்லாவா இளைய சமுதாயம்! அதை அணைகளுக்குள் அடக்கி, விளைநிலங்களுக்குத் திருப்பி, ஆக்கபூர்வமான ஆறாக மாற்றவேண்டியது பெரியோரின் கடமையல்லவா..? அதை நன்கு உணர்ந்து இளைய சமுதாயம் நின்று கேட்கும் வண்ணம் அறிவுபூர்வமான, அறிவியல்பூர்வமான உதாரணங்களை ‘இளைஞனே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ என்ற இந்த நூலில் சொல்லி ஆற்றுப்படுத்தியிருக்கிறார் சுவாமி சுகபோதானந்தா. சீறிப் பாய்ந்தோடும் இளம் குதிரையின் மீது துள்ளி ஏறி அமர்ந்து, அதற்குப் பண்பாட்டுக் கடிவாளம் கட்டி, உத்வேகமெனும் சக்கரங்கள் கொண்ட வாழ்க்கைத் தேரில் பூட்டி, வெற்றி எனும் ஊரை அடைய வழிகாட்டியிருக்கிறார். அன்பின் வரிகளை பல்வேறு மதங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதிலாகட்டும்... உற்சாக வரிகளை பெரும் சாதனையாளர்களின் வாழ்க்கையில் இருந்து உதாரணம் காட்டுவதிலாகட்டும்... சொல்ல வந்த கருத்தை அழகான கதை மூலம் சுவாரஸ்யமாகச் சொல்வதிலாகட்டும்... சுகபோதானந்தா, சுகமான போதனை மூலம் ஆனந்தத்தை வழங்குவதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ‘சக்தி விகட’னில் தொடராக வந்தபோதே ஏராளமான வாசகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த எழுச்சிக் கட்டுரைகள், இப்போது முழுத் தொகுப்பாக இதோ உங்கள் கைகளில். ‘இந்த நூலைப் படிப்பதற்கு முன் இருந்த நிலை... நூலைப் படித்த பின் இருந்த நிலை’ என்று ஒருவரை எந்த நூல் மாற்றியமைக்குமோ அதுவே மிகச் சிறந்த நூல் என்று சொல்வார்கள். அந்தவகையில் இந்த நூல், படிப்பவர்களை முற்றிலும் மாற்றியமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Read More
Generic Name : Book
Book code : 326
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-084-2
Country of Origin : India
Contact us : books@vikatan.com
Out of Stock
₹
M.R.P: ₹.00