Author : பீட்டர் கன்சால்வஸ்
Print book
₹75
Out of Stock
‘காந்தி’ என்ற உடன் கச்சம் கட்டிய _ முட்டிக்கு மேல் வேட்டியும், வெற்று உடம்பில் துண்டும் அணிந்த _ உருவம்தான் மனதில் எழும். ரூபாய்த் தாளில் காந்தியின் உருவத்தைப் பார்க்கும் சிறுமி, ‘இது யார்?’ என்று தன் தாத்தாவிடம் கேட்கும்போது, ‘இவர்தான் காந்தி தாத்தா. நம் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தார்!’ என்பார். ‘காந்தி ஆடை அணிந்த புரட்சிதான் உண்மையில் விடுதலை வாங்கித்தந்தது’ என்கிற புதிய கருத்தை இந்த நூலில் நிலைநிறுத்துகிறார் நூலாசிரியர் பீட்டர் கன்சால்வஸ். காந்தியின் மேடைப் பேச்சைவிட, அவருடைய உண்ணாவிரதமும் மௌனவிரதமுமே மக்களிடம் பேசியது. எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய ஆடைதான் மக்களிடம் அதிகம் பேசியது. காந்தி அணிந்த ‘வெள்ளை ஆடை’தான் ‘வெள்ளையனை’ வெளியேற்றியது. காந்தி ஆடையைக் குறைத்தார்; ராட்டை சுழன்றது; அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து சாட்டையும் சுழன்றது. இந்தியா தன் ஆடைகளை, தானே நூற்றது. மான்செஸ்டரிலும், லங்காஷயரிலும் நூற்பாலைச் சக்கரங்கள் நின்றன என்பதை நூலாசிரியர் எடுத்து வைக்கிறார். ஆடை உடுத்துவதில், வெள்ளையர்களைப் பார்த்துப் பழகிய மேல் நாட்டு மோகம் இன்றைக்கும் நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஆனால், ‘குறைந்த ஆடைதான் உடுத்துவேன். அதுவும் நம் நாட்டு ஆடைதான் உடுத்துவேன்’ என்று ‘ஸ்டைலை’ மாற்றிக் காட்டி நெஞ்சுரத்தோடு செயல்பட்ட காந்தி, ‘இந்தியர்கள் அனைவரும் சுதேசி உடையையே உடுத்த வேண்டும்’ என, தானே முன்மாதிரியாக இருந்தார். ‘Clothing for Liberation’ என்ற தலைப்பில் ‘சேஜ்’ பதிப்பகம் வெளியிட்ட ஆங்கில நூலை தமிழில் சிறப்பாக மொழி மாற்றம் செய்திருக்கிறார் சாருகேசி.
Read More
Generic Name : Book
Book code : 585
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-350-8
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00