Author : அருணன்
Print book
₹460
தமிழக வரலாற்றில் மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர் இவர்களின் ஆட்சி அருமை பெருமைகளையும் அவர்களின் வீரப் பிரதாபங்கள் பற்றியே பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது, பாடப்பட்டுள்ளது. ஆனால் பல்லவ மன்னர்களைப் பற்றி சிறிய அளவிலேயே பேசப்பட்டிருக்கிறது. பல்லவர்கள் தமிழ் மன்னர்களா, இல்லையா என்பது பற்றியும் இன்னும் தெளிவான சான்றுகள் இல்லை. உலகப் பிரசித்திபெற்ற மாமல்லபுரம் கோயில் களையும் சிற்பங்களையும் பற்றியும் மட்டுமே வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்லவ மன்னர்களின் ஆட்சி முறையையும் அவர்களின் போர் திறத்தையும் அவ்வளவாகப் பதிவு செய்யப்பட வில்லை. பல்லவர்கள் காலத்தில் தமிழ் எப்படி வளர்ந்தது, அப்போது நிலவிய சைவ, வைணவ, சமண மதங்கள் நிலை பற்றியும், திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், ஆழ்வார்கள் ஆகியோர் தத்தம் விரும்பிய மதங்களைப் பற்றிப் பெருமையாகப் பாடிய பாக்கள்... என பல்லவர் கால அனைத்து சம்பவங்களைப் பற்றியும் பதிவு செய்யப்பட்ட நூல் இது. பல்லவப் பேரரசின் ஆட்சிக் காலத்தை கண்முன் நிறுத்தியிருக்கும் இந்த நூல், உங்களை பல்லவர்கள் காலத்துக்கே அழைத்துச் செல்லும்.
Read More
Generic Name : Book
Book code : 1151
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-93-94265-64-6
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00