Author : அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித்
Print book
₹55
உலக அளவில் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிற எளிமையான, இயல்பான, நுட்பமான நகைச்சுவை உணர்வு கொண்ட நாவல்தான் நம்பர் ஒன் லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்ஸி அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதிய முதல் படைப்பு! இந்த நாவல் மொழிபெயர்க்கப்பட்டு, அவள் விகடனில் தொடர்கதையாக வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றது. பெண்களுக்கென்று பிரத்யேகமான உணர்வுகள் உண்டு. அந்த உணர்வுகள் கோபமாக, அழுகையாக, ஹாஸ்யமாக, தேடலாக, காதலாக, போராட்டமாக... இப்படி பல நிலைகளில் வெளிப்படும். ஆடு, மாடுகள் நிறைந்த, புழுதி படர்ந்த போட்ஸ்வானா மண், ரமோட்ஸ்வே என்கிற உள்ளம் கவரும் பெண்மணி, அவருடைய பாச மிகு தந்தை, நேச மிகு நண்பர், சிறிய டிடெக்டிவ் ஏஜன்ஸி, அங்கு வரும் வித்தியாசமான வாடிக்கையாளர்கள்... எல்லோரையும் பெயர்களை மாற்றி வாசித்தால் அப்படியே நம் மண்ணின் மணம்தான்! என் பக்கத்து வீட்டில் குடியிருக்கிற பெண்மணி ஒரு டிடெக்டிவ் ஏஜன்ஸி ஆரம்பித்தால் எப்படி இருக்குமோ அப்படியொரு இயல்புடன் இருக்கிறது கதை. வாசிக்கையில் என் உதடுகள் அடிக்கடி விரிகின்றன புன்னகையால்! என்பது வாசகர் ஒருவரின் கமென்ட்! பெண்களுக்கு நிறைய நம்பிக்கைகளையும், புதிய வ
Read More
Generic Name : Book
Book code : 321
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-079-8
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00