Books
  • Title comes here
  • Title comes here
757, Anna Salai600002ChennaiIN
Vikatan Publication
757, Anna SalaiChennai,IN
044-42634283https://gumlet.vikatan.com/vikatan/2021-10/7b10b810-8d68-45b1-a5be-d85b4f9c3d02/books_logo.png?w=240&format=webp&dpr=0.9books@vikatan.com
X
✓

Added to Cart

Cart subtotal: ₹

Go to CartContinue Shopping

விகடன் தீபாவளி மலர் - 2026

Author : கட்டுரையாளர்கள்

Print book

₹200

Description

குடும்பத்தோடும், உறவுகளோடும், நண்பர்களோடும் மகிழ்ச்சியும் குதூகலமும் ததும்ப நாம் கொண்டாடும் தீபாவளி வந்துவிட்டது. ஒளிரும் பட்டாசு, தித்திக்கும் இனிப்பு, பளபளக்கும் புத்தாடை... இவற்றைப் போன்றதுதான் விகடன் தீபாவளி மலரும். ரசனையான ஓவியங்கள்-புகைப்படங்கள், சிறப்பான வாசிப்பனுபவம் தரும் சிறுகதைகள், கவிதைகள், காத்திரமான கட்டுரைகள், வணங்குதலுக்குரிய ஆன்மிகப் படைப்புகளுடன் இந்த ஆண்டு தீபாவளி மலர் இப்போது உங்கள் கரங்களில் தவழ்கிறது. எதிலும் புதுமை விரும்பும் ஜென் ஸி தலைமுறை உட்பட அத்தனை வாசகர்களின் எதிர்பார்ப்பையும் உள்வாங்கிக்கொண்டு உருவாகியிருக்கிறது இந்த `விகடன் தீபாவளி மலர் - 2026.' மலேசியாவில், `கண்ணாடிக் கோயில்’ என அழைக்கப்படும் ராஜகாளியம்மன் ஆலயம் குறித்த கட்டுரை சுற்றுலா விரும்பிகளுக்கு விருந்து. வீட்டிலும் அலுவலகத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகளை சேகரித்துவைத்திருக்கும்  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளியின் பேட்டி ஆச்சர்யம். திருப்புகழ் மகாமந்திர பூஜையின் மகத்துவத்தை விவரிக்கும் பாசுரங்களுடன் ஓவியர்கள் பத்மவாசன், ம.செ., கொண்டையராஜு, ராஜா, ஜீவா, பிரேம் டாவின்ஸி ஆகியோரின் ஓவியங்கள் மிளிர, அருள் மணக்கும் ஆன்மிகப் பக்கங்கள் வாசகர்களுக்குப் பரவசம் தரும். ரஜினிகாந்த் என்ற `சூப்பர்ஸ்டார்’ திரைத்துறைக்கு வந்த 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும்விதமாக, அவருடன் பணியாற்றிய மூன்று தலைமுறைக் கலைஞர்களின் பேட்டிகளுடன் சிறப்புக் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. இந்த ஆண்டில் நூற்றாண்டைக் கொண்டாடும் கவிஞர் கண்ணதாசன், எழுத்தாளர்கள் தமிழ்வாணன், மஹா ஸ்வேதாதேவி, முன்னாள் கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, நடிகர் வி.கே.ராமசாமி ஆகியோரை உரிய முறையில் கௌரவிக்கும் சிறப்புப் பதிவுகள்; தபால் அறிமுகமாகி, அது பெரும் துறையாக இந்தியாவில் உருவான வரலாறு; மறைமலை அடிகளைப் பற்றிய சுவாரஸ்யக் குறிப்புகள்; தென்னாப்பிரிக்காவில் காந்தியைக் காப்பாற்றிய காவல் அதிகாரிக்கு அங்கிருந்த மக்கள் பரிசாக வழங்கிய கடிகாரம் குறித்த கட்டுரை; சினிமாத்துறை சார்ந்த பேட்டிக் கட்டுரைகள் எனப் படிக்க படிக்கத் திகட்டாத தகவல்கள் இந்த மலரை அலங்கரிக்கின்றன. இசை, கலை, இலக்கியம், பயணம், வரலாறு, மொழி, குடும்பம், திருவிழா என, பக்கத்துக்குப் பக்கம் பல வண்ணங்களால் இழைத்த ஒரு வானவில்லைப்போல் மலர்ந்திருக்கிறது இந்த விகடன் தீபாவளி மலர்.

Read More

Product details

Generic Name : Book

Book code : 2026

Publisher: Vikatan Publications

Language : Tamil

ISBN : 111

Country of Origin : India

Contact us : books@vikatan.com

₹

M.R.P: ₹.00