Deliver to Tamilnadu

பாஸ்வேர்டு

Author : கோபிநாத் Book Code: 790
புத்தகத்தின் விலை
200

வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழையாக மனித வாழ்க்கையும் இருந்தால் யாருக்கு என்ன லாபம்? நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, வாழ்க்கை என்பது உயர்ந்த குணங்களுடன் வாழ்வதுதான் என்பதை உணர்ந்து, உயர்வாக நடப்பவர்களைப் போற்றி, அவர்களிடமிருந்து கற்று, அதன்படி ஒழுகி வாழ்வதும், கயவுச் சிந்தனைகளைத் தவிர்த்து வாழ்வதும்தான் வாழ்க்கை. அப்படி உயர்வாக வாழ்வது ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல. மனத் திண்மை ஒன்றால் மட்டுமே அது சாத்தியம்! அதுவே வீரம்! ஒரு நாள் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். எல்லோரைச் சுற்றியும் வாழ்க்கை இழைந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், சுற்றிலும் நடப்பதைக் கவனிப்பது எல்லோருக்கும் கைவந்த கலை அல்ல. அப்படிக் கவனித்து, பாலையும் நீரையும் பிரித்து பாலைப் பருகிச் சிறகை விரித்து வானில் எழும் அன்னப் பறவையைப் பால இருப்பவர்கள் மேன்மக்களே! இந்த நூலில் தன்னைச் சுற்றி நடந்தவற்றைக் கவனித்து அதில் மனிதர்களின் உணர்ச்சிகளை அளந்திருக்கிறார் நூல் ஆசிரியர் கோபிநாத். மனித உணர்வுகளை மதித்து நடந்தவர்களும் வந்து போகிறார்கள்; அதைக் காலில் போட்டு மிதித்துச் சின்னத்தனமாக நடந்துகொண்டவர்களும் வந்துபோகிறார்கள். ஆனாலும், யார் வழியில் நடந்தால் வாழ்க்கை நிம்மதி என்பது தெளிவாகத் தெரிகிறது! ‘இப்படியெல்லாம் நடந்துகொள்’ என்று ‘அட்வைஸ்’ செய்வது போல இல்லாமல், என்னால் மனிதனின் மகோன்னதத்தைப் பார்க்க முடிந்தது; உங்களாலும் முடியும் என்ற பாணியில் எழுதியிருப்பது சிலாகிக்கக் கூடியது. வாழ்க்கையில் சோர்ந்துபோனவர்களும், ஏமாற்றப்பட்டவர்களும்கூட மனிதன் மேல் இன்னும் நம்பிக்கைகொண்டிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது! எவ்வளவுதான் கொடூரங்கள் சுற்றிலும் நடந்தாலும் உலகம் கொடூரமானதல்ல சாதுவானவர்களும் ஈரம் உள்ளவர்களும் இந்த உலகத்தைக் காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற பெரிய நம்பிக்கை ஏற்படுகிறது. இவர்களால் தான் மழை இன்னும் பெய்கிறது. இது எல்லாமும் நம்மைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே சாத்தியம். மனிதத்தைப் போற்றும் இந்த நூல் உங்களை ஈர்க்கும் என்பது திண்ணம்!

New Releases

1