Deliver to Tamilnadu

வி.ஐ.பி-களின் ரிலாக்ஸ் யுக்திகள்!

Author : எஸ்.கதிரேசன் Book Code: 1047
புத்தகத்தின் விலை
190

மன அழுத்தம், தூக்கமின்மை, தனிமை உணர்தல், பதற்றம், ஏமாற்றம், கோபம், தோல்வி, பயம், என்ன செய்வதென்று தெரியாத நிலை... இன்றைய வேகமான பரப்பரப்பான காலகட்டத்தில் மேற்கண்ட இந்த உணர்வுகள் தாக்காத மனிதர்களே இல்லை. மன அழுத்தம் ஏற்பட பெரும் காரணம், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வேலை வேலை என்று ஓடுவது, பலரது அலட்சியப்போக்கு, மனிதநேயமின்மை, சுகபோகங்களுக்கு அடிமையாகி தன்னைச் சுற்றி பல இன்னல்களைத் தானே உருவாக்கிக்கொள்வது என பலவற்றைக் கூறலாம். மன அழுத்தம் அதிகமாகும்போது என்ன செய்து இயல்பு நிலைக்குத் திரும்பலாம் என்பதைப் பற்றி பல துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பலர் சொன்ன கருத்துகளும் வழிமுறைகளும் விகடன் மின்னிதழில் தொடர் கட்டுரைகளாக வெளியாகின. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. புத்தகம் படிப்பேன்... தூங்கிவிடுவேன்... லைட் ஹவுஸ் மேலே ஏறுவேன்... வாக்கிங் செல்வேன்... தியானம் செய்வேன்... யோகா செய்வேன்... பாட்டு கேட்பேன்... அடுத்தவர்களுக்காக வேண்டிக்கொள்வேன்... கெடுதல் செய்தவர்களை மன்னித்துவிடுவேன்... வார்த்தையால் யாரையும் காயப்படுத்தமாட்டேன்... பிடிச்சத செய்வேன்... எல்லாவற்றையும் பாசிடிவ்வாக பார்ப்பேன்... இப்படி மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒவ்வொரு பிரபலமும் ஒவ்வொரு வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறார்கள். வாருங்கள் மன அழுத்தத்தைப் போக்குவோம், மன அமைதியுடன் வாழ்வோம்!

New Releases

1