Deliver to Tamilnadu

பெரிதினும் பெரிது கேள்!

Author : த. செந்தில் குமார் Book Code: 1067
புத்தகத்தின் விலை
540

நம் தமிழ் மரபின் தொன்மை, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை நாம் மறந்துவிட்டாலும் கீழடி போன்ற ஆய்வுகள் நம் தமிழ் இனத்தின் புகழை, பெருமையை அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்துகின்றன. இன்றைய தலைமுறையினருக்கு எல்லாமே எளிதில் கிடைத்துவிடுவதால், நம் தலைவர்களின் கடந்த காலப் போராட்டங்களை, நாட்டின் சரித்திரத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனினும் நம் பாரம்பர்யத்தை இளைஞர்கள் முற்றிலும் மறந்துவிடவில்லை என்பதை அவ்வப்போது நிரூபித்துக்கொண்டும் உள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தியாகம் செய்த தியாகிகளை, தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தெடுத்த பழம்பெரும் இலக்கியங்கள், தமிழறிஞர்கள், தஞ்சைப் பெரிய கோயிலின் அறியப்படாத சரித்திரம், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம்... என இந்த நூலெங்கும் அரிய தகவல்களைத் தந்துள்ளார் நூலாசிரியர். உதாரணத்துக்கு, ‘தந்தை பெரியார் 1944-ல் புது இயக்கம் தொடங்கியபோது, என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தபோது, சைவ சித்தாந்தக் கழகத்துக்கு அடிக்கடி பெரியார் சென்று வந்த தாக்கத்தால், அறிவார்ந்தவர்கள் கூடும் அவை என்று பொருள்படக்கூடிய ‘கழகம்' என்ற வார்த்தையை சைவ சித்தாந்தக் கழகத்திலிருந்து எடுத்து ‘திராவிடர் கழகம்' எனப் பெயர் சூட்டினார்' - போன்ற செய்திகளை இன்றைய தலைமுறைக்குத் தந்திருக்கிறார். அரிதினும் அரிய தகவல்களைக் கொண்ட பெட்டகம் இந்தப் புத்தகம்!

New Releases

1