Author : ஆண்ட்ரூ ஹோம்ஸ்
Print book
₹115
Out of Stock
“டேய், இன்னைக்கு வந்த கேள்வித்தாள் மாதிரி, நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லடா. அதுல இருந்த அத்தனைக் கேள்விகளும் எனக்கு அத்துபடிடா!” “அப்படியா! அப்போ இந்தப் பரீட்சையில் நீ நூத்துக்கு நூறுன்னு சொல்லு.” “எனக்கு அந்தக் கேள்விகள்தான் அத்துப்படின்னு சொன்னேனே தவிர, பதில் தெரியும்ன்னு சொல்லலே..!” _ இப்படித்தான் இருக்கிறது, இன்றைய மாணவர்களின் கல்வி நிலை! ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன்’ என்ற வரியை உச்சரித்து அதன் முழு சந்தோஷத்தைப் பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள உதவும் வகையில், ஆண்ட்ரூ ஹோம்ஸ், ஆழ்ந்தக் கருத்துகளோடு ஆங்கிலத்தில் எழுதிய ‘Pass your Exams’ என்ற நூலின் தமிழ் வடிவம் இந்த நூல். இதனை, ஒரு மாணவனுக்கே உரிய கவனத்துடன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ந.வினோத்குமார். பாடங்களை கவனிப்பது மட்டுமே தேர்வு எழுத போதுமானதா, பாடங்களை எவ்வாறு திட்டமிட்டுப் படிக்க வேண்டும், பரீட்சையின்போது நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன, தேர்வு அறையில் நாம் எந்தவிதமான மனநிலையில் இருக்க வேண்டும், தேர்வுத்தாளைத் திருத்தும் மதிப்பீட்டாளர்கள் மாணவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்... போன்ற கேள்விகளுக்கான பதில்களை 52 ஐடியாக்களாக சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் ஆண்ட்ரூ ஹோம்ஸ். ஒவ்வொரு அத்தியாத்திலும் உள்ள ‘யோசனை மூலை’, ‘அப்படியா!’ போன்ற அம்சங்கள், நீங்கள் பாடங்களில் அதிக கவனம் செலுத்த உறுதுணையாக இருக்கும். அதிலும் சந்தேகப் பெட்டியில், உள்ள கேள்வி_பதில் பகுதி, ஒவ்வொரு மாணவரும் தன்னைத்தானே சோதித்துப் பார்க்க சிறந்த வாய்ப்பு. பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாஸ்மார்க் பெற்றிட, இந்த நூல் சிறந்த நண்பனாக விளங்கும்!
Read More
Generic Name : Book
Book code : 572
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-336-2
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00