Author : பாரதி பாஸ்கர்
Print book
₹130
Out of Stock
பெண்களின் கனவுகளும் முன்னேற்றங்களும் சமுதாயத்தில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும், பெண்களின் மனம் படும் பாடு, அவர்களுடைய எதிர்பார்ப்புகள், ஏக்கம், தாகம் இவை கவனிக்கப்படாதபோது எழும் நியாயமான கோபம் ஆகியவற்றையும் கவனித்து, ஆராய்ந்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் பாரதி பாஸ்கர். பெண்களின் முன்னேற்றத்தில் பங்கு கொள்ளாத ஆண்களின் மனோபாவம், பெண்களை பெண்களே தவறாகப் புரிந்து கொள்வது, ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்ணே எதிரி ஆகும் நிலையைச் சமாளிப்பது -இப்படி ஒவ்வொரு உணர்வையும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல். பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாத ஆணாதிக்க சமுதாயம், வீட்டில் மட்டுமல்ல... பொது இடங்களிலும், மேடைகளிலும், அலுவலகங்களிலும், பயணங்களிலும் பெண்களை மட்டம்தட்டி, அவர்களை முன்னேறவிடாமல் குறுக்கே நின்று கட்டியிருக்கும் அணைகளை உடைத்து வீறுகொண்டு நடைபோடும் நதியாக மாறுவது எப்படி என்பதை எழுச்சியான நடையில் வழிகாட்டுகிறார் நூலாசிரியர். கணவன், மாமியார், நாத்தனார் பிரச்னைகளை அன்பால் சமாளிக்கும் வித்தைகளையும், குழந்தைகள் வளர்ப்பில் பெண்ணுக்கு இருக்கும் பொறுப்புகளையும், மனைவியாக குடும்பத்தில் நுழைந்தவுடன் அந்தக் குடும்பத்தினர் மீது காட்டவேண்டிய அக்கறையையும் உணர்த்தி, கரைகளை உடைக்காமல் அமைதியான நதி போல ஓடுவது எப்படி என்பதை மிகவும் நெகிழ்ச்சியாக மனம் கவரும்படி வர்ணித்திருக்கிறார். அவள் விகடன் இதழ்களில் வெளிவந்த 'நீ நதி போல ஓடிக்கொண்டிரு...’ தொடர் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
Read More
Generic Name : Book
Book code : 569
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-333-1
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00