Author : பா.ராஜநாராயணன்
Print book
₹370
உண்மைச் சம்பவங்கள் கதையாகும்போது எப்போதுமே ஒருவித பரபரப்பு இருக்கத்தான் செய்யும். அதிலும் சில வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, தென்மாவட்டத்தில் திகிலூட்டிக் கொண்டிருந்த ஒரு தாதாவின் கதையை எழுதும்போது சூடு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும். பா.ராஜநாராயணன் எழுதி, ஜூனியர் விகடனில் வெளியான ‘லிங்கம்’ தொடர் அந்த வகையைச் சேர்ந்ததுதான். நல்லது எது, கெட்டது எது என்று லிங்கத்துக்கும் பிரபுவுக்கும் எடுத்துச் சொல்வதற்கு யாராவது இருந்திருந்தால், வன்முறைப் பாதையில் போய் தங்களைத் தொலைத்து, தங்கள் குடும்பத்தையும் தவிக்க விட்டிருக்கமாட்டார்கள். அவர்களின் வாழ்க்கையைச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் அவர்களுடைய குடும்பத்தின் வேதனைகளையும் தெரிந்துகொண்டால் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையுமே என்ற முயற்சியில் எழுதப்பட்ட தொடரே இது. இப்போது புத்தக வடிவில் பார்க்கும்போது, அந்த உணர்வுகள் இன்னும் அழுத்தமாகப் பதிந்திருப்பது புரியும். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட கதை என்பதால், நடந்தவற்றை நன்கு அறிந்தவர்கள்
Read More
Generic Name : Book
Book code : 89
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN :
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00