Books
  • Title comes here
  • Title comes here
757, Anna Salai600002ChennaiIN
Vikatan Publication
757, Anna SalaiChennai,IN
044-42634283https://gumlet.assettype.com/vikatan/2021-10/7b10b810-8d68-45b1-a5be-d85b4f9c3d02/books_logo.png?w=240&format=webp&dpr=0.9books@vikatan.com
X

Added to Cart

Cart subtotal:

Go to CartContinue Shopping

மெய்யழகன்

Author : ச.பிரேம்குமார்

Print book

360

Description

சினிமாவின் பாதிப்பு ஆண்டாண்டு காலமாக இங்கே வேரூன்றியிருக்கிறது. சிறுவயது ஞாபகங்களிலிருந்தே அது நம்மைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஏராளமான கலைகள் இணைந்தது என்பதால் சினிமாவின் வசீகரம் அதிகம். உலகெங்கும் திரைப்படங்கள் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அப்படிப் பார்க்கும்போது நாம் சினிமாவைத் தள்ளி வைக்க முடியாது. எல்லா உணர்ச்சிகளுக்கும் தாயுணர்வு அன்புதான். அன்பால் மட்டுமே நாம் இணைந்திருக்கிறோம். ‘மெய்யழகன்’ திரைப்படம் அந்த அன்பைப் பற்றி அதிகம் பேசுகிற படம். வெறுப்பு நடைமுறையாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் அன்பால் மட்டுமே அந்த வெறுப்பை நீக்க முடியும். சொல்லப் போனால் மனிதனை அன்பால் தொடுவதே இலக்கியம். இனிமையாய் பேசி, இனிமையாக மனதைத் திறந்து காட்டி, இனிமையாகத் தூண்டினால் நாம் மிகப்பெரிய விஷயத்தை மனிதர்களுக்குச் சொல்லிவிடலாம். அப்படித்தான் இயக்குநர் பிரேம்குமார் இந்த நூலை எழுதி ‘மெய்யழகன்’ திரைப்படமாகக் கொண்டுவந்தார். எத்தனையோ பேர் இதன் பாதிப்பில் அவரிடம் பேசியிருக்கிறார்கள். நெக்குருகி கையைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் சிந்தி இருக்கிறார்கள். அக்கறை, விசாரிப்பு, தோள்சாய்க்க ஓர் இடம் என எல்லோருக்கும் தேவைப்படுகிறது. ‘மெய்யழகன்’ போன்ற ஒரு சினிமா உருவாகி வந்த விதத்தை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது. அன்பை நயமாகவும், நுண்ணறிவோடும், எளிமையாகவும் பிரேம்குமாரால் சொல்ல முடிந்திருக்கிறது. இலக்கியத்தாலும், சினிமாவாலும் நமது ரசனை இயல்பாக மேம்படுவது உண்டு. அப்படி ஒரு புரிதலைக் கொடுப்பதற்கு இந்த ‘மெய்யழகன்’ படைப்பு உங்களுக்கு உதவும். ‘மெய்யழகன்’ படைப்பின் வழி பயணம் செய்யும்போது இன்னும் நம் கண்ணுக்குக் கட்டுப்படாத பிரியங்களின், தரிசனங்களின் குவியல்தான் இது என்ற உண்மை புலப்படுகிறது. இனி பயணத்தைத் தொடருங்கள்.

Read More

Product details

Generic Name : Book

Book code : 1154

Publisher: Vikatan Publications

Language : Tamil

ISBN : 978-93-94265-26-4

Country of Origin : India

Contact us : books@vikatan.com

M.R.P: .00