Author : விகடன் பிரசுரம்
Print book
₹220
மகாத்மா காந்தி ஹரிச்சந்திரன் நாடகம் பார்த்து அது ஏற்படுத்திய தாக்கத்தால், பொய் சொல்லக்கூடாது உண்மையே பேசவேண்டும் என உறுதிகொண்டு அப்படியே இறுதிவரை வாழ்ந்தார். கர்மவீரர் காமராஜர் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன் சொன்ன சொல்லால், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். இப்படி தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை தங்களைப் பாதித்த சம்பவங்கள், தங்கள் வாழ்க்கையை மாற்றிய ஒரு வாக்கியம், முன்மாதிரியாகத் திகழ்ந்த மனிதர் என எல்லோரும் எதிர்கொண்டிருப்பார்கள். ஒரு மனிதனின் வாழ்க்கையையே திசை மாற்றும் சக்தி ஒரு சொல்லுக்கும் உண்டு, ஒரு சம்பவத்துக்கும் உண்டு, ஒரு மனிதனுக்கும் உண்டு... என்பதை நாம் சந்திக்கும் சக மனிதர்கள் மூலம் அறிந்துகொண்டிருக்கிறோம். தந்தை, தாய், நண்பன் அல்லது யாரோ ஒரு நபர் என நம் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் மனிதர்களை நாம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் நம்மை அறியாமலேயே நம் வாழ்க்கையை மாற்றிவிடக்கூடியவை. அப்படி தங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய வாசகம், மனிதர், சம்பவம் பற்றி பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் ஆனந்த விகடனில் பகிர்ந்து கொண்டனர். அவற்றின் தொகுப்பு நூல் இது. இனி, அந்த வாசகங்களையும் மனிதர்களையும் சம்பவங்களையும் அறிந்துகொள்ளுங்கள்!
Read More
Generic Name : Book
Book code : 1143
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-93-94265-89-9
Country of Origin : India
Contact us : books@vikatan.com
₹
M.R.P: ₹.00