Author : சோலை
Print book
₹130
Out of Stock
தமிழகத்தின் துணை முதல்வர் என்ற இன்றைய நிலையை அடைவதற்குமுன் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த கரடு முரடான பாதையை எளிய நடையில், அழுத்தமான சம்பவங்களோடு விவரிக்கும் முழுமையான நூல் இது. திருமணம் ஆன ஐந்தாம் மாதமே 'மிசா' சட்டத்தின் கீழ் அவர் கைதான அந்தத் தருணங்களையும், சிறையில் அவரைக் குறிவைத்து அரங்கேறிய கொடுமைகளையும் பற்றி இந்த நூலில் படிக்கும்போது, ஒரு உண்மை சட்டென மேலெழும்பி வரும். 'தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகனாகப் பிறந்துவிட்டதாலேயே மு.க.ஸ்டாலின் இத்தனை வேகமாக முன்னேறி வந்தாரா?' என்ற கேள்விக்கான பதிலைச் சொல்லும் உண்மை அது! பெரிய இடத்து வாரிசு என்ற அந்தஸ்து பல சோதனைகளைத் தந்ததோடு, ஒருவகையில் சந்தேகமில்லாமல் ஸ்டாலினுக்கு உதவி புரிந்திருப்பதையும் இந்த நூல் மறைமுகமாக உணர்த்துகிறது. அதாவது... படிப்படியாக திட்டமிட்டு, பலப்பல சோதனைகளைக் கடந்து வந்து, பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவே ஐந்து முறை தமிழக முதல்வராக அமர்ந்துவிட்ட ஒருவருக்கு மகனாகப் பிறந்ததோடு, அவருடைய அரசியல் நடவடிக்கைகளை மிக அருகில் நின்று கவனிக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்ததால் _ தந்தையைத் தலைவராகவே பார்த்து வளர்ந்து வந்ததால் _ அந்த
Read More
Generic Name : Book
Book code : 517
Publisher: Vikatan Publications
Language : Tamil
ISBN : 978-81-8476-280-8
Country of Origin : India
Contact us : books@vikatan.com
In Stock
₹
M.R.P: ₹.00